அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

சென்னை: ஜாபர் சாதிக் மீதான அமலாக்கத் துறை வழக்கில் இயக்குனர் அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் டெல்லி மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை கடந்த மார்ச் மாதம் கைது செய்து டெல்லி திஹார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஜாபர் சாதிக்கை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் கடந்த ஜூன் 26-ம் தேதியன்று கைது செய்தது.

அதன்படி சிறை மாற்று வாரண்ட் மூலமாக திஹார் சிறையில் இருந்து கொண்டுவரப்பட்ட ஜாபர் சாதிக் புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இது தொடர்பாக வழக்கு சென்னை முதன்மை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது; ஜாபர் சாதிக் மீதான அமலாக்கத் துறை வழக்கில் இயக்குனர் அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.

குற்றப்பத்திரிகையில் 12வது நபராக இயக்குநர் அமீர் சேர்க்கப்பட்டுள்ளார். சட்ட விரோதமான பணத்தை இயக்குனர் அமீர் கையாண்டதாக குற்றப்பத்திரிகையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தியதாக பதிவான வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

The post அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: