நாகர்கோவில், செப்.17: நாகர்கோவில் மாநகர திமுக சுற்றுச்சூழல் அணியின் சார்பில் கலைஞர் 101 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளவிளை புனித செபஸ்தியார் சமூக நலக்கூடத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாநகர சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜன் தலைமையில் நடந்தது. மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் டாக்டர் ஆனந்த், மாநகரச் செயலாளர் ஆனந்த், மாவட்ட அயலக அணி அமைப்பாளர் முகமது பஷீர் மற்றும் சுற்றுப்புற சூழல் அணி நிர்வாகிகள் ராமச்சந்திரன், கணேசன், சுதேசன், ஆண்டனி பவின், குமார், அனிஸ் குமார், வீரபாகு முன்னிலை வகித்தனர்.
குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மேயர் மகேஷ் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். கூட்டத்தில் மேற்கு பகுதி செயலாளர் சேக்மீரான், 18-வது வார்டு கவுன்சிலர் அமல செல்வன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் அலெக்ஸ், 2வது வட்ட செயலாளர் ராஜேஷ் மற்றும் ஊர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் மேயர் மகேஷ் வழங்கினார் appeared first on Dinakaran.