பெரம்பலூர், ஜன.3: பெரம்பலூர் மாவட்டத்தில் உளுந்து பயிரைத் தாக்கும் நோய்கள் பற்றி மாவட்ட விதைச் சான்று உதவி இயக்குனர் தரணிகாமாட்சி விளக்கமளித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட விதை சான்று உதவிஇயக்குனர் தரணி காமாட்சி பெரம்ப லூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விதைப் பண்ணை வயல்களை ஆய்வுசெய்து வருகிறார். ஆய்வின் அடிப்படையில் அவர் விடுத்துள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்ப தாவது :
உளுந்து, பாசிப் பயறு கொண்டக்கடலை, கள்ளு பயரு போன்ற பயறு வகை பயிர்களை சகுப்படி செய்ய, மார்கழி மற்றும் தை பட்டம் மிக உகந்த பட்டமாகும். இந்தப் பட்டத்தில் பயிர்களில் மஞ்சள் தேமல் நோய் வராது. எனவேஅதிக மசூல் எடுக்கலாம். பெரம்பலூர் மாவட்டத்தில் ஆண்டு தோறும் சராசரியாக 2250 முதல் 3350 ஏக்கர் வரை பயறு வகை பயிறுகள் சாகுபடி செய்யப்படுகிறது.
உளுந்து வம்பன்- 8,10,11 பாசிபயறு வம்பன்- 5, கோவை- 8, போன்ற பயறு வகைகளை சாகுபடி செய்யலாம். மற்ற ரகங்கள் 200 முதல் 300கிலோ ஏக்கருக்கும், வம்பன் 10, 11 ரகங்கள் 500 முதல் 750 கிலோ என்ற அதிக மகசூல் தரக்கூடியது. விதைப்பு செய்ய ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதை தெளிப்பு முறைக்கும், விதைக்கும் உருளை மூலமும் அல்லது வரிசை முறையில் நடவு செய்தால் ஒரு ஏக்கருக்கு 4 கிலோ விதைகள் போது மானது. ஒரு கிலோ விதைக்கு உயிர் உர விதை நேர்த்தியான ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா, போட்டாஷ் பாக்டீரியா தலா 10 மில்லி விதம் கலந்த பின்பு, ட்ரைக்கோடெர்மா விரிடி 10 கிராம் கலந்து காயவைத்து விதைக்கவும்.
மேலும் மேற்கண்ட உயிர் உரங்களை தலா 1 லிட்டர் வீதம் அடிஉரமாக இடலாம். தற்போது உளுந்து பயிரை சாறு உறுஞ்சும் பூச்சி, இலைப்புள்ளி நோய், கருங் கிலை நோய், சாம்பல் நோய் தாக்குதல் காணப் படுகிறது. இவற்றை சரி செய்ய இமிடகுளோர்பிரின் 10 மில்லி, கார்பண்டசிம் + மேங்கோசெப் கலவை 20 கிராம், பாக்டீரியாமைசின் 4கிராம்,இவற்றை 10லிட்டர் தண்ணீரில் தெளிக்கவும். சாம்பல் நோய் தாக்குதல் காணப்பட்டால் நனையும் கந்தகம் 20 கிராம், 10 லிட்டர் தண்ணீருக்கு என்ற அளவி லும் டிஏபி 2 கிலோ முதல் நாள் ஊறவைத்து தெளி வான நீரை எடுத்து பூ பூக்கும் தருவாயிலும், பிஞ்சு பிடிக்கும் தருவாயிலும் இருமுறை தெளிப்பதால் அதிக மசூல் எடுக்க லாம். விதைப் பண்ணை அமைத்து உளுந்து சாகுபடி செய்தால் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி தகவல் பெற்றுக் கொள்ளாம். மேலும் விதை பண்ணைமூலம் விற்கப் படும் 1கிலோ தூய்மை யான விதை ரூ105க்கு கொள்முதல் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட விதைச் சான்று உதவி இயக்குனர் தரணி காமாட்சி பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா நூத்தப்பூர் அருகே உள்ள நெற்குணம் கிராமத்தில் நடத்திய நேரடி ஆய்வின்போது, பெரம்பலூர் விதைச்சான்று அலு வலர் ராஜேந்திரன், வேப் பந்தட்டை உதவி விதை அலுவலர் ராஜூ மற்றும் நெற்குணம் உளுந்து விவ சாயி சங்கரப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.
The post பெரம்பலூர் மாவட்டத்தில் உளுந்து பயிர்களை தாக்கும் நோய்கள் குறித்து விதைசான்று உதவி இயக்குனர் ஆய்வு appeared first on Dinakaran.