அரையாண்டு விடுமுறைக்கு பின் பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு: 1ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை 29,158 மாணவர்களுக்கு பாடபுத்தகம் வழங்கல்

பெரம்பலூர், ஜன.3: பெரம்பலூர் மாவட்டத்தில் அரையாண்டு விடுமுறைக்குப்பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு முதல்நாளிலேயே 1ம் வகுப்பு முதல் 7ம் வகுப்புவரை பயிலும் 29,158 மாணவ மாணவிய ருக்குமூன்றாம் பருவத்திற்கான தமிழக அரசின் விலையில்லா நோட்டுகள் மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகம்மாள் உத்தரவுப்படி, பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) மற்றும் பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடை நிலை கல்வி) ஆகியோரது கட்டுப் பாட்டில் இயங்கி வரும் 1ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை பயிலும் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள், அரசு ஆதி திராவிடர் நல தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் மற்றும் உண்டு உறைவிட தொடக்க நடுநிலைப் பள்ளிகள் என மாவட்ட அளவிலுள்ள 230 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பாக மூன்றாம் பருவத்திற்கான விலையில்லா நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள 1 ம் வகுப்பைச் சேர்ந்த 3,405 பேர், 2 ம் வகுப்பைச் சேர்ந்த 3,402 பேர், 3ம் வகுப்பைச் சேர்ந்த 3,987 பேர், 4 ம் வகுப்பைச் சேர்ந்த 4,300 பேர், 5ம் வகுப்பைச் சேர்ந்த 4,805 பேர், 6 ம் வகுப்பைச் சேர்ந்த 1,480 பேர், 7ம் வகுப்பைச் சேர்ந்த 1,490 பேர் என மொத்தம் 22,869 மாணவ- மாணவியருக்கு தமிழ்நாடு அரசின் பாடநூல் கழகத் தால் தயாரித்து, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப் பட்டுள்ள விலையில்லா நோட்டு புத்தகங்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்த பிறகு நேற்று(2ம்தேதி) வியாழக்கிழமை தொடங் கப்பட்ட 3 ம் பருவத்திற் கான பாடங்களை பயிலும் அனைத்து மாணவ மாண வியருக்கும் வழங்கப் பட்டு ள்ளது.

அதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட (இடைநிலை) கல்வி அலுவலர் கட்டுப் பாட்டில் இயங்கி வரும் 41 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 40 அரசு மேல் நிலைப் பள்ளிகள், 9 ஆதி திராவிடர் நல உயர் நிலை ப்பள்ளிகள், 2 ஆதி திராவிடர் நல மேல்நிலை ப்பள்ளி, 2 அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், 3 அரசு நிதி உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றில் 6ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் 2,985 பேர், 7ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர் 3,304 பேர் என 6,289 பேர்களுக் கும், 6 ம் வகுப்பில் ஆங்கிலக் கல்வி பயிலும் 505பேர், 7ம் வகுப்பில் ஆங்கிலக் கல்வி பயிலும் 654பேர் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் இருந்து பிரிந்துவந்து சேர்ந்த 9 ம் வகுப்பில் ஆங்கிலக் கல்வி பயிலும் 23 பேர் என்ன மொத்தம் 1,182 பேர்களுக் கும் விலையில்லா நோட்டு புத்தகங்கள் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளான நேற்றே அந்தந்த பள்ளி தலைமைஆசிரியர் களால் அனைத்து மாணவ, மாணவியருக்கும் வழங்கப்பட்டு விட்டன.

இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 1ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வி முறையில் மற்றும் ஆங்கி லக்கல்வி முறையில் பயிலும் மாணவ மாணவி யர், 9ம் வகுப்பில் ஆங்கிலக்கல்வி பயிலும் 23பேர் என மொத்தம் 29,158 மாணவ- மாணவியருக்கு தமிழக அரசின் விலை யில்லா நோட்டுகள் மற்றும் பாடப் புத்தகங்கள் வழங்கப் பட்டுவிட்டன என பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்ககல்வி) அய்யாசாமி, பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை கல்வி) செல் வகுமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

The post அரையாண்டு விடுமுறைக்கு பின் பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு: 1ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை 29,158 மாணவர்களுக்கு பாடபுத்தகம் வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: