குறிப்பாக தொழில்துறையில் புதிய முதலீடுகளை ஈர்த்திடும் வகையில் கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கி 19 நாட்களுக்கு அமெரிக்க நாட்டிற்கு முதல்வர் பயணம் மேற்கொண்டு பல புதிய முதலீட்டுத் திட்டங்களை கொண்டு வந்தார். சென்னை மறைமலைநகரில் கார் உற்பத்தியை நிறுத்திக் கொண்ட போர்டு நிறுவனம், முதல்வரின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் உற்பத்தி ஆலையை தொடங்குவதாக அறிவித்தது. ஏற்கெனவே சென்னை பன்னாட்டு கார்கள் உற்பத்தி முனையமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கார் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு 9,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசுக்கும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால், சுமார் 5,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அமைய இருக்கும் ஆலையில், ஜாகுவார் லேண்ட் ரோவர் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலையின் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 2 லட்சம் கார்களாக இருக்கும் எனவும், அதில் மூன்றில் ஒரு பகுதி ஜாகுவார் லேண்ட் ரோவர் எலெக்ட்ரிக் கார்களாக இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுபோக, இந்த ஆலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் உட்பட மற்ற கார்களும் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. இந்த கார் ஆலை ராணிப்பேட்டையில் அமைய இருக்கிறது. 2026ம் ஆண்டுக்குள் பெரும்பாலான கார்களை எலெக்ட்ரிக் கார்களாக மாற்றுவதற்கு ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
* 9,000 கோடி ரூபாய் முதலீட்டில் 400 ஏக்கரில் ராணிப்பேட்டையில் இந்த கார் ஆலை அமைய உள்ளது.
* இந்த ஆலையில், ஜாகுவார் லேண்ட் ரோவர் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் திட்டம்.
* ஆலையின் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 2 லட்சம் கார்களாக இருக்கும்.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் 28ம் தேதி ராணிப்பேட்டையில் அடிக்கல் டாடாவின் புதிய கார் தொழிற்சாலை: ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்க திட்டம்; 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு appeared first on Dinakaran.