₹2.35 லட்சத்திற்கு பருத்தி விற்பனை

திருச்செங்கோடு, செப்.13: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், வாராந்திர பருத்தி விற்பனை நடந்தது. ஏலத்தல் 100 மூட்டை பருத்தி ₹2.35 லட்சத்திற்கு விற்பனையானது. பருத்தி ரகங்களை முசிறி புதுப்பட்டி, வடக்கு நல்லியம்பட்டி, தெற்கு நல்லியம்பட்டி, தண்டலை, திருத்தலையூர், சேங்கணம், ராசிபுரம், கதிரா நல்லூர், புதுச்சத்திரம், துறையூர், அம்மம்பாளையம், மருவத்தூர் போன்ற பகுதிகளிலிருந்து விவசாயிகள் கொண்டு வந்தனர். பிடி ரகம் குவிண்டால் ₹7509 முதல் ₹8450 வரையிலும் விற்பனையானது.

The post ₹2.35 லட்சத்திற்கு பருத்தி விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: