ராசிபுரம், செப்.10: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியம் போடிநாயக்கன்பட்டி ஊராட்சி போடிநாயக்கன்பட்டியிலிருந்து குள்ளப்பநாயக்கன்பட்டி வரை, 3.6 கி.மீ., சாலையை ₹2.37 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., திட்டப்பணியை தொடங்கி வைத்தார்.
ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட திமுக பொருளாளர் பாலச்சந்திரன், ஒன்றியக் குழு துணைத்தலைவர் சந்திரா சிவகுமார், ஒன்றியக்குழு உறுப்பினர் அருளரசன், ஒன்றிய திமுக பொருளாளர் முத்துச்செல்வன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பன்னீர்செல்வம், சிங்களாந்தபுரம் ஊராட்சி செயலாளர் முருகேசன், ஒன்றிய துணை செயலாளர் ரங்கசாமி மற்றும் பிடிஓ மலர்விழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post ₹2.37 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி appeared first on Dinakaran.