அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது

 

மல்லசமுத்திரம், செப்.11: மல்லசமுத்திரம் அருகே வட்டூர்பெத்தாம்பட்டி, அருந்ததியர் தெரு பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (44). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் பெரியப்பா மகன் தங்கராஜ் (38). நேற்று முன்தினம் திருமணத்திற்கு செல்வதற்காக, தங்கராஜ் மாதேசிடம், டூவீலரை கேட்டுள்ளார். திருமணத்திற்கு சென்று விட்டு தங்கராஜ், மாதேஸ்வரனிடம் டூவீலரை திருப்பி தரும் போது, முகப்பு விளக்கு கண்ணாடி உடைந்து காணப்பட்டது. இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் அங்கிருந்து சென்ற தங்கராஜ், நள்ளிரவில் மாதேஸ்வரன் வீட்டிற்கு சென்று அவரை கத்தியால் குத்தினார். இதில், பலத்த காயமடைந்த மாதேஸ்வரன் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்த புகாரின்பேரில், மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து தங்கராஜை கைது செய்தனர். பின்னர், திருச்செங்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையிலடைத்தனர்.

The post அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது appeared first on Dinakaran.

Related Stories: