நாமக்கல், செப்.12: சேலத்தில் இன்று, தமிழக விவசாயிகள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடக்கிறது. இது குறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலம் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள செளடாம்பிகா ஓட்டலில், இன்று (12ம் தேதி) காலை 10 மணியளவில் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. தென்னை, பனைமரத்திலிருந்து இறக்கும் கள்ளுக்கான தடையை அரசு நீக்க வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. இதில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post விவசாயிகள் சங்க செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.