ராசிபுரம், செப்.14: ராசிபுரம் நகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் சங்கர் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் பாலச்சந்தர், நகர்மன்ற தலைவர் கவிதா சங்கர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கசாமி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி விநாயகமூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி., கலந்து கொண்டு பேசினார். அப்போது, கட்சி பணிகள் குறித்தும், உறுப்பினர் சேர்க்கை மற்றும் எதிர்வரும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெறும் யுக்தி தொடர்பாகவும் ஆலோசனை வழங்கினார். இந்த கூட்டத்தில் வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் துரைசாமி, மாநில மருத்துவரணி ராஜேஷ் பாபு, மாவட்ட இளைஞரணி கார்த்திக், நகர அவைத் தலைவர் வைத்தீஸ்வரன், துணை செயலாளர் மோகன், நகர பொருளாளர் இமாம் அலிசா, மாவட்ட பிரதிநிதி ஆனந்த் மற்றும் வார்டு செயலாளர்கள், நகரமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
The post திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் appeared first on Dinakaran.