திருச்செங்கோடு, செப்.17: திருச்செங்கோடு ஒன்றியம், வட்டூர் ஊராட்சி வேலனம்பட்டியில், மூணாம்பள்ளி காடு முதல் வெள்ளப்பெருமாள் கோயில் வரை, ஒன்றிய பொது நிதியின் கீழ் ₹1.39 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது. மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் தலைமை வகித்து பணிகளை, தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல், யூனியன் சேர்மன் சுஜாதா தங்கவேல், மல்லசமுத்திரம் ஒன்றிய செயலாளர் பழனிவேல், முன்னாள் கவுன்சிலர் ராமசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் தங்கவேல், பிரபு, வெங்கடாஜலம், சேகர், தேவராஜ், சரவணன் மற்றும் கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post ₹1.39 கோடியில் சாலை பணி மதுராசெந்தில் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.