அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம்

சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன்குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தலைமையில் இன்று (12.09.2024) சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வணிகவரி ஆய்வு குழு பிரிவில் சிறப்பாக பணியாற்றி அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தந்தமைக்காக கூடுதல் ஆணையர் திரு. எஸ். ஞானக்குமார் மற்றும் குழுவினர்க்கு மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. பி மூர்த்தி, அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்கள்.

அமைச்சர், அரசு செயலாளர் வணிகவரி மற்றும் பதிவுத்துறை, வணிகவரி ஆணையர் ஆகியோரின் தொடர் அறிவுறுத்தல், நடவடிக்கைகள் கண்காணிப்பு மற்றும் அலுவலர்களின் செயல்பாட்டினால், வணிகவரித்துறையின் மொத்த வரி வருவாய் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ரூ.55,807 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டு ஆகஸ்ட் 2023 மாதம் வரை வசூல் செய்யப்பட்ட ரூ.49,716 கோடியுடன் ஒப்பிடுகையில் இந்த நிதி ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் ரூ.6091 கோடி கூடுதலாக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி வசூல் பொறுத்தவரை, 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ரூ.31,338 கோடி வரி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு ஆகஸ்ட் 2023 மாதம் வரை வசூல் செய்யப்பட்ட ரூ.26,767 கோடியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வரி வருவாய் 17 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

The post அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: