மதுரையில் 105; சென்னையில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது: இன்றும் அதிகரிக்கும், வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: வறண்ட வானிலை காரணமாக இரண்டு நாட்களுக்கு இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வறண்ட வானிலை நிலவிவருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெயில் அதிகரித்து காணப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் மாதத்தில் சென்னையில் நேற்று முன்தினம் தான் 102 டிகிரியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரி வெயில் கொளுத்தியது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், சென்னையில் 102 டிகிரி, ஈரோடு 103 டிகிரி, திருச்சி 101 டிகிரி, இது தவிர 15 மாவட்டங்களில் நேற்று 100 டிகிரி வெயில் நிலவியது. இதற்கிடையே தமிழகத்தில் 5 மாவட்டங்களில் நேற்று மாலையில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 22ம் தேதி வரையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இருப்பினும், தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வ ரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். சென்னையில் இன்றும் வெயில் 100 டிகிரி முதல் 102 டிகிரி வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமாக மாலை நேரத்தில் மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. இதுதவிர, மன்னார் வ ளைகுடா தென் தமிழக கடலோரப் பகுதிகள் அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிமீ வேகம் முதல் 65 கிமீ வேகம் வரை வீசும் என்பதால் மீனவர்்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

The post மதுரையில் 105; சென்னையில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது: இன்றும் அதிகரிக்கும், வானிலை மையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: