பொதுவுடைமை சமூகத்தை கட்டமைக்க உறுதியேற்போம்: எடப்பாடி டிவிட்

சென்னை: பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு: ஜாதியவாதத்தை, மதவாதத்தை கூரிய கருத்துகளால் நொறுக்கிய கேள்வித்தடி, பெரியாரின் தடி. சமத்துவம், சமூகநீதி, பெண் விடுதலை ஆகிய உயரிய கோட்பாட்டு வேள்விகளை நம்மில் விதைத்த அவர்தம் பிறந்தநாளில், அடிப்படைவாதத்திற்கு துளியும் இடமின்றி, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பொதுவுடைமைச் சமூகத்தை கட்டமைக்க உறுதியேற்போம். பெரியாரின் புகழ் ஓங்குக. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள பெரியார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சென்னையில், அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள பெரியார் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: பகுத்தறிவு பகலவன் பெரியாரின் 146ம் பிறந்தநாள் செப்டம்பர் 17. சமூகநீதி வரலாற்றில் மிகவும் முக்கியமான இந்த நாளில்தான் வன்னிய மக்களுக்கு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான தொடர்சாலை மறியல் போராட்டம் தொடங்கியது. தமிழ்நாட்டின் இன்றைய இன்றியமையாத் தேவைகள் சமூகநீதியும், சுயமரியாதையும்தான். அவற்றை போதித்தவர் பெரியார். அவரது பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குவதுடன் சமூகநீதியையும், சுயமரியாதையையும் வென்றெடுக்க இந்நாளில் உறுதியேற்போம்.

The post பொதுவுடைமை சமூகத்தை கட்டமைக்க உறுதியேற்போம்: எடப்பாடி டிவிட் appeared first on Dinakaran.

Related Stories: