காஞ்சிபுரம், செப்.12: காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் சிறுகாவேரிபாக்கம், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. ஒன்றிய குழு தலைவர் மலர்க்கொடி குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் கிராமமக்கள் குறைகளை போக்கி, அடிப்படை வசதிகளை நிறைவேற்றிடும் வகையில் ஒன்றிய குழு கவுன்சிலர்களின் கோரிக்கையினை ஏற்று பெரும்பாக்கம் திருப்புட்குழி, ஆசூர், தாமல், களக்காட்டூர், கீழம்பி, கீழ்க்கதிபூர், கிளார், கோனேரி குப்பம், மேல் ஒட்டிவாக்கம், மேல் கதிர்பூர், முசரவாக்கம், முட்டவாக்கம், புத்தேரி, தம்மனூர், விப்பேடு, விஷார், அவளூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சாலை பணிகள், மழைநீர் கால்வாய்கள், குடிநீர் பணிகள் உள்ளிட்டவை மேற்கொள்ள சுமார் ₹1 கோடி 73 லட்சம் ஒன்றிய பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து, திட்டப்பணிகள் செய்ய ஒப்புதல் அளித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு விதமான செலவினங்களுக்கும் ஒப்புதல் அளித்தும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், ஒன்றிய குழு துணை தலைவர் திவ்யபிரியா இளமது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோமளா, சூர்யா, ஒன்றிய கவுன்சிலர்கள் ராம்பிரசாத், ஆதிலட்சுமி ரவி, தேவபாலன், ஒன்றிய அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் ₹1.73 கோடியில் திட்டபணிகளுக்கு தீர்மானம் appeared first on Dinakaran.