இதில், எம்.டி.சண்முகம் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் காலை அவரது வீட்டில் இயற்கை எய்தினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சிறு, குறு மற்றும் தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் நேரில் வந்து எம்டி சண்முகத்தின் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதேபோல், காஞ்சிபுரம் எம்பி செல்வம், செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமிமதுசூதனன், வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.டி.லோகநாதன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன், துணை தலைவர் ஏவிஎம் இளங்கோவன், ஒன்றிய கவுன்சிலர் வக்கீல் சோமசுந்தரம்.
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மஞ்சுளாபொன்னுசாமி, மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற துணை தலைவர் சுமதிலோகநாதன், ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானிகார்த்தி, துணை தலைவர் ரேகாகார்த்தி, காரணைப்புதுச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் நளினிஜெகன், நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதாசீனிவாசன், கீரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வசுந்தரிராஜேந்திரன், வண்டலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் உட்பட அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் எம்.டி.சண்முகத்தின் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். இதனை அடுத்து அவரது உடலை நேற்று காலை 10:30 மணியளவில் நல்லடக்கம் செய்தனர்.
The post வண்டலூர் அருகே மண்ணிவாக்கத்தில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் மறைவுக்கு அமைச்சர், எம்பி, எம்எல்ஏக்கள் அஞ்சலி appeared first on Dinakaran.