செங்கல்பட்டு: செங்கல்பட்டு நடப்போர் நலவாழ்வு சங்கத்தின் வெள்ளி விழா சார்பாக ராமபாளையம் பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்த புறக்காவல் நிலைய கட்டிட பணிகள் முழுமையாக நிறைவு பெற்றது. இதை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரனீத் நேற்று காவல்துறை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
செங்கல்பட்டு நகரில் முக்கிய மைய பகுதியாக இருப்பது ராமபாளையம் பகுதி, இங்கு புதிய புறக்காவல் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட உள்ளது.
இங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியிலும் ஈடுபடுவார்கள். இந்த புறக்காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படும். தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகம் நடந்து வந்தது. தற்போது 50 சதவிகிதத்திற்கு அதிகமாக குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். அப்போது, செங்கல்பட்டு கோட்ட துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேசன், செங்கல்பட்டு நகரமன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், நகர மன்ற துணை தலைவர் அன்புச்செல்வன், செங்கல்பட்டு நடப்போர் நலவாழ்வு சங்கத்தின் தலைவர் பாண்டுரங்கன், செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் வேலாயுதம் மற்றும் பொதுமக்கள், காவல்துறையினர் கலந்துகொண்டனர்.
The post செங்கல்பட்டு மாவட்டத்தில் குற்றச்சம்பவங்கள் குறைக்கப்பட்டுள்ளது: எஸ்.பி. சாய்பிரனீத் பேட்டி appeared first on Dinakaran.