தார்சாலையாக மாற்ற கோரி ஆர்ப்பாட்டம்

நாமக்கல், டிச. 23: கொல்லிமலையில், குதிரை வழிச்சாலையை தார்சாலையாக மாற்ற கோரி மலைவாழ் மக்கள் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொல்லிமலை சேலூர் நாடு குழிப்பட்டி முதல் எருமப்பட்டி வரை 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ள குதிரை வழி சாலையை தார்சாலையாக மாற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். இதில் மலைவாழ் மக்கள் பலர் கலந்து கொண்டு குதிரை சாலையை தார்சாலையாக மாற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர். இதைத்தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

Related Stories: