இந்த மழையினால் புதோ மாகாணத்தில் பாலம்இடிந்து விழுந்தது. இதில்,10 கார்கள், லாரிகள்,2 பைக்குகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. வாகனங்களில் பயணித்த 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 13 பேர் மாயமாகியுள்ளனர். காவ் பாங் மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது சாலையில் வந்து கொண்டிருந்த பஸ் அருகில் உள்ள ஆற்றில் விழுந்தது. ஆற்று வெள்ளத்தில் பஸ் அடித்து செல்லப்பட்டது. ஆனால் நிலச்சரிவினால் சாலை சேதமடைந்துள்ளதால் மீட்பு பயடையினரால் அங்கு செல்ல முடியவில்லை. சாபா என்ற இடத்தில் நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். யாகி புயல் மற்றும் அதற்கு பின் ஏற்பட்ட வெள்ளம்,நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 143 ஆகியுள்ளது. மேலும் இந்த புயல், கனமழை காரணமாக 60க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர்.
The post வியட்நாமில் யாகி புயல் தாக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 143-ஆக உயர்வு : 59 பேரை காணவில்லை.!! appeared first on Dinakaran.