பஸ்கள் மோதல்: 2 பேர் காயம்

 

அந்தியூர்,செப்.10:ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி பஸ் நிறுத்தம் பகுதியில் அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து பவானி நோக்கி அரசு பேருந்து நேற்ற முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. பருவாச்சி பஸ் நிறுத்தத்தில் அம்மன்பாளையம் பிரிவு பகுதியில் குறுக்கில் இருந்து வந்த கார் ஒன்றிற்கு வழி விடும் வகையில் நடுரோட்டில் அரசு பேருந்தை நிறுத்திய போது, எதிர் திசையில் இருந்து வந்த தனியார் கம்பெனி மினி பேருந்து அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் தனியார் பேருந்து ஓட்டுனர் அந்தியூர் ஒரிச்சேரி புதூர் வடக்கு தெருவைச் சேர்ந்த கணேசனுக்கு(34) வலது கையில் காயம் ஏற்பட்டது. அரசு பேருந்தில் பயணம் செய்த பயணி பவானி ஜம்பை முகமதியர் தெருவைச்சேர்ந்த முகமது பாரூக்(54) என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.இதுகுறித்து அந்தியூர் போலீஸ் எஸ்ஐ திருமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post பஸ்கள் மோதல்: 2 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: