கேளம்பாக்கம் ஊராட்சி குப்பைகளை கழிவாக மாற்றும் நவீன இயந்திரம் பயன்படுத்த முடிவு

 

திருப்போரூர், செப்.10: கேளம்பாக்கம் ஊராட்சியில் குப்பைகளை கழிவாக மாற்றும் நவீன இயந்திரங்கள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய கேளம்பாக்கம் ஊராட்சியில் நீண்ட காலமாக குப்பைகளை சேகரித்தல், அவற்றை தரம் பிரித்தல், உரம் தயாரித்தல் ஆகியவற்றை மேற்கொள்ள போதிய இடம் இல்லாத நிலை உள்ளது. தனியார் நிறுவன பங்களிப்புடன் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கும் குப்பைகளை அந்தந்த இடத்திலேயே உரமாக மாற்றும் வகையில், நவீன இயந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று முன்தினம் இந்த நவீன இயந்திரங்கள் ஊராட்சி அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு அதன் செயல்பாடு குறித்து ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன், துணை தலைவர் பாஸ்கரன், வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் விளக்கப்பட்டது. முக்கிய இடங்களில் இவற்றை வைத்து பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்துவது என்றும், இந்த திட்டம் வெற்றிபெற்றால் ஊராட்சி முழுவதும் இந்த இயந்திரங்களை பயன்படுத்துவது என்றும் முடிவு ெசய்யப்பட்டது.

The post கேளம்பாக்கம் ஊராட்சி குப்பைகளை கழிவாக மாற்றும் நவீன இயந்திரம் பயன்படுத்த முடிவு appeared first on Dinakaran.

Related Stories: