அவரது திடீர் மறைவு தமிழ்த் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல் செய்தியை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார். டில்லி பாபு தனது தயாரிப்பு நிறுவனமான ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி மூலம், ராட்சசன் மற்றும் மரகத நாணயம் போன்ற சூப்பர்ஹிட் படங்களை தயாரித்திருக்கிறார்.
பல இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து, அவர்கள் வாழ்வில் ஒளியேற்றியவர். கடந்த 2015 ஆம் ஆண்டு ‘உறுமீன்’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி, மரகத நாணயம், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சுலர் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.
The post திரைப்படத் தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார். appeared first on Dinakaran.