சேது பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா

மதுரை, செப். 5: மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது. நிகழ்விற்கு கல்லூரி தலைவர் மற்றும் நிறுவனர் எஸ்.முகமது ஜலில் தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரிகள் எஸ்.எம்.சீனி முஹைதீன், எஸ்.எம்.சீனி முகமது அலியார், எஸ்.எம்.நிலோஃபர் பாத்திமா, எஸ்.எம். நாசியா பாத்திமா முன்னிலை வகித்தனர். முதல்வர் சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினார். டீன் மோகன லட்சுமி வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக தன்னம்பிக்கை பேச்சாளர் ராமகிருஷ்ணன், காட்டி குரூப்ஸ் முதன்மை மனித மேம்பாட்டு துறை தலைவர் சஸ்வதி ரே மற்றும் ஐஸ்கொயர் பிசினஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் ஜாபர் அலி கலந்து கொண்டனர். சேது பொறியியல் கல்லூரி நடத்திய 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான ஊக்கத்தொகை தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், ரூ.1 லட்சத்து இருபதாயிரம் மற்றும் ரூ.50000 என மூன்று பரிசுகள் வழங்கப்பட்டது. இவற்றை 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெற்றனர்.

The post சேது பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா appeared first on Dinakaran.

Related Stories: