இந்த இடைக்கால அரசில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதும், அவரது உதவியாளர்கள் மீதும் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசில் வங்கதேச முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியா(79) கடந்த 6ம் தேதி வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது பேகம் கலிதா ஜியா 5 வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். போலியான நாளில் பிறந்த நாள் கொண்டாடியது, போர்க் குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவித்தது உள்பட வெவ்வேறு ஐந்து வழக்குகளில் இருந்து பேகம் கலிதா ஜியா விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வங்கதேச முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியா 5 வழக்குகளில் இருந்து விடுவிப்பு appeared first on Dinakaran.