வகுப்புகளுக்கு மாணவர்கள் வராமல் தேர்வெழுத வைக்கும் பி.எட். கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து: ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரிக்கை

சென்னை: வகுப்புகளுக்கு மாணவர்கள் வராமல் தேர்வெழுத வைக்கும் பி.எட்., கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) கே.ராஜசேகரன் அனைத்து கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்; தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்./எம்.எட் பட்ட வகுப்புகளில வெளி மாநிலத்தில் இயங்கும் Global Academy போன்ற பல்வேறு சேர்க்கை மையங்கள் வாயிலாக, மாணவர்களை Irregular முறையில் வகுப்புகளுக்கே வராமல் சேர்க்கை செய்து தேர்வு எழுத அனுமதிப்பதாக UGC -யில் இருந்து புகார் மனு இப்பல்கலைக்கழகத்தில் பெறப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்து பல்கலைக்கழகத்தின் சார்பில் நேரில் சென்று கேரளா காவல்துறையில் Global Academy மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, கல்லூரி முதல்வர்கள் / செயலாளர்கள் இது போன்ற பல்கலைக்கழக விதிகளுக்கு புறம்பான மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளக்கூடாது என கண்டிப்பாக தெரிவிக்கலாகிறது. மேலும், இது போன்ற தவறான irregular மாணவர் சேர்க்கையினை மேற்கொள்ளும் கல்லூரிகளின் மீது பல்கலைக்கழகத்தின் சார்பில் முன் அறிவிப்பின்றி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உரிய வழிமுறைகளை பின்பற்றி, ஆட்சிமன்ற குழுவின் அனுமதி பெற்று, கல்லூரிகளின் இணைவு ரத்து செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வகுப்புகளுக்கு மாணவர்கள் வராமல் தேர்வெழுத வைக்கும் பி.எட். கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து: ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: