தடகள விளையாட்டு போட்டி மாவட்டம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி பட்டியலின மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்

 

அரியலூர், செப்.3: அரியலூர் மாவட்டத்தில் ஆதிகுடிகாடு, ஆலத்தியூர், ஆதனக்குறிச்சி, அயன்தத்தனூர் போன்ற கிராமங்களில் பட்டியலின மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துத் தரக் கோரி, மாவட்ட கலெக்டர் ரத்தினசாமியிடம் விசிக வினர் நேற்று மனு அளித்தனர். அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமியிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரியலூர் மாவட்ட செயலர் அங்கனூர் சிவா தலைமையில் அரியலூர் தொகுதிச் செயலர் மருதவாணன் மற்றும் கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அரியலூர் மாவட்டம், ஆதிக்குடிகாடு பட்டியலின மக்களுக்காக மயான கொட்டகை அமைத்துத் தரவேண்டும்.

செந்துறை அடுத்த ஆலத்தியூர் ஊராட்சியில், பொதுமக்கள் நலனுக்காக அங்கு சமுதாய நலக் கூடம், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி ஆகியவற்றை கட்டித் தரவேண்டும். ஆதனக்குறிச்சியில் மகளிர் சுகாதார வளாகம் கட்டித் தரவேண்டும். அயன்தத்தனூர் புது ஏரியில் மதில் சுவரை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டக் கோவில் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post தடகள விளையாட்டு போட்டி மாவட்டம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி பட்டியலின மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: