திருவண்ணாமலை, செப்.2: ஜவ்வாது மலையில் ₹70 லட்சம் மதிப்பில் பரமனந்தல் முதல் அமிர்தி வரை சாலை விரிவாக்க பணியை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் பரமனந்தல் முதல் ஜமுனாமரத்தூர் வழியாக வேலூர் மாவட்டம், அமிர்தி வரை சாலை விரிவாக்க பணிக்கு ₹70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, 3.75 மீட்டர் அகலத்தில் இருந்து 5.50 கிலோ மீட்டர் தூரம் சாலை அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணிகள் நடைபெறுகிறது. இதில், 376 சிறுபாலங்கள் திரும்ப கட்டுதல், 21 சிறிய பாலங்கள், 4 சிறுபாலங்கள் புதிதாக கட்டுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையில் 26 கொண்டை ஊசி வளைவுகளில் மண்ணின் தன்மையை வைத்து 40 தடுப்புச்சுவர்கள், 24 இடங்களில் அனைத்து சுவர்கள், 22 இடங்களில் வடிநீர் கால்வாய் அமைக்கவும் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சாலை விரிவாக்கம் செய்யும் பணியை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு ெசய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது சிறப்பு அலுவலர் தொழில்நுட்பம் நெடுஞ்சாலைத்துறை சென்னை ப.சந்திரசேகர், திருவண்ணாமலை கண்காணிப்பு பொறியாளர் ஆர்.கிருஷ்ணசாமி, திருவண்ணாமலை கோட்ட பொறியாளர் பி.ஞானவேல், போளூர் உதவி கோட்ட பொறியாளர் பா.திருநாவுக்கரசு, திருவண்ணாமலை தர கட்டுப்பாடு உதவி கோட்ட பொறியாளர் பி.கோமேஸ்வரி, போளூர் உதவி பொறியாளர் சி.வேதவல்லி, கலசபாக்கம் உதவி பொறியாளர் எம்.வெங்கடேசன் மற்றும் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் உடன் இருந்தனர்.
The post (தி.மலை) பரமனந்தல்- அமிர்தி சாலை விரிவாக்க பணி அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு ஜவ்வாது மலையில் ₹70 லட்சத்தில் படம் உண்டு appeared first on Dinakaran.