செய்யாறு, டிச.25: செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. கடந்த 22ம் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அப்போது, மாணவியை வந்தவாசி அடுத்த தெள்ளார் கிராமத்தை சேர்ந்த வேன் டிரைவர் தினேஷ் என்பவர் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியின் தந்தை அனக்காவூர் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து மாணவியையும், அவரை கடத்தியதாக கூறப்படும் தினேஷையும் தேடி வருகிறார்.
