இப்படி தாக்கி அதனுடைய அலுமினியம், பித்தளை போன்ற உதிரி பாகங்கள் சிதறி கிடக்கும். இவற்றிற்கு நல்ல கிராக்கி உள்ளதால் இப்பகுதியில் உள்ள மக்கள் அவற்றை துப்பாக்கிச் சூடு முடிந்த பிறகு பொறுக்கிச் செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் ராக்கெட் லாஞ்சர் கொண்டு சென்றபோது அது கீழே விழுந்து வெடித்ததில் அப்பகுதியில் உள்ள மூதாட்டி உள்ளிட்ட 2 பேர் பலத்த காயமடைந்தனர்.
இதற்கு ஏற்றார்போல் நேற்று அனுமந்தபுரம் பகுதியில் வசிக்கும் கோதண்டன் (52) என்பவர் வெடிக்காத ராக்கெட் லாஞ்சரை எடுத்துச் சென்று, தான் வைத்திருந்த கத்தியால் உடைத்தபோது அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது கோதண்டன் பலத்த காயமடைந்து செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மறைமலைநகர் காவல் துறையிடம் விசாரணை மேற்கொண்டபோது, இது ராணுவத்திற்கு சொந்தமான பொருள். இதை யாரும் எடுத்துச் சொல்லவோ, அல்லது பொறுக்கிச் செல்லவா கூடாது.
அப்படி செய்தால் தேசிய வெடிமருந்து சட்டத்திற்கு அவர்கள் கைது செய்யப்படலாம். ஆனால் இப்பகுதியில் உள்ள மக்களின் அறியாமையின் காரணமாக இதுபோன்ற விபத்துகள் நேரிடுவதாக ராணுவ தரப்பிலிருந்தும் காவல்துறை தரப்பில் இருந்தும் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து யாரும் புகார் அளிக்காத நிலையில் பாதிக்கப்பட்ட நபருக்கு தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வருகிறது.
The post துப்பாக்கி சுடும் தளத்தில் ராக்கெட் லாஞ்சர் வெடித்து ஒருவர் காயம் appeared first on Dinakaran.