நீடாமங்கலத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

 

நீடாமங்கலம், செப்.1: நீடாமங்கலத்தில் இதயம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடந்தது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கான இலவச இதயம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடந்தது. இயக்கத் தலைவர் பத்ம ஸ்ரீ ராமன் தலைமை வகித்தார். கோட்டூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலர் முரளிதரன், வலங்கைமான் நீடாமங்கலம் வட்டார பொறியாளர் சிதம்பரம் முகாமை தொடங்கிவைத்தனர்.

இம்முகாமில் தஞ்சாவூர் தனியார் மீனாட்சி மருத்துவமனை மருத்துவக்குழு மருத்துவர்கள் ஆரோன் குருநாதன், தஞ்சாவூர் தனியார் மேக்சி விஷன் கண் மருத்துவமனை குழுவினர்கள் பரிசோதனை செய்தனர். இம்முகாமில் இதயம் தொடர்பாக 148 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 90 நபர்களுக்கு இசிஜி பரிசோதனைகளும் 72 நபர்களுக்கு எக்கோ பரிசோதனை எடுக்கப்பட்டது.

மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனை செய்யப்பட்டது. 107 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு அதில் 92 பேருக்கு குறைபாடுகள் கண்டறியப்பட்டது. முன்னதாக செயலாளர் ஜெகதீஷ் பாபு வரவேற்றார். பல்நோக்கு சேவை இயக்க உறுப்பினர்கள் முகாமினை வழிநடத்தினர். நிறைவில் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் நன்றி உரையாற்றினார்.

The post நீடாமங்கலத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் appeared first on Dinakaran.

Related Stories: