புதுச்சேரி, டிச. 18: புதுச்சேரி வில்லியனூர் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் மாலை தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வில்லியனூர் ஒதியம்பட்டு கோயில் அருகே 2 வாலிபர்கள் சந்தேகப்படும்படி நின்றிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் பிடித்து சோதனையிட்டதில், கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.இதில் வில்லியனூரை சேர்ந்த பூவரசன் (22), வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்த உதயகுமார் (37) என்பதும், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், பொதுமக்களுக்கு கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஒதியம்பட்டு கோயில் அருகே சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
- ஒதியம்பட்டு கோயில்
- புதுச்சேரி
- வில்லியனூர்
- சப்-இன்ஸ்பெக்டர்
- திருமுருகன்
- வில்லியனூர் ஒதியம்பட்டு கோயில்
