×

ஆந்திராவில் எங்கும் கட்டாய மதமாற்றம் இருக்கக்கூடாது: முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு

திருமலை: ஆந்திராவில் கட்டாய மதமாற்றம் எங்கும் இருக்கக்கூடாது என்று ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்து அறநிலையத்துறை வளர்ச்சி குறித்து நேற்று அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இதில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் ராமநாராயண ரெட்டி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: ஆந்திராவில் கட்டாய மதமாற்றம் எங்கும் இருக்கக்கூடாது. அதை முற்றிலும் தடை செய்ய வேண்டும். கடினமான நடவடிக்கைகளின் மூலம் கட்டாய மத மாற்றங்களை தடுக்க முடியும். அர்ச்சகர்களுக்கு சம்பளம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இதனால் 1683 பேர் பயனடைவார்கள். அதேபோல், கோயில்களுக்கு தூபதீப பிரசாதமாக வழங்கப்படும். தூதீப தொகைக்காக மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. தற்போது அவை ரூ.10,000 ஆக வழங்கப்படும். கோயில்களில் வேற்று மதத்தினர் பணியில் இருக்கக் கூடாது. ஒவ்வொரு ஊரிலும், கோயில் இருப்பதைப் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

The post ஆந்திராவில் எங்கும் கட்டாய மதமாற்றம் இருக்கக்கூடாது: முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Chief Minister ,Chandrababu Naidu ,Tirumala ,Chief Secretariat ,Amaravati ,
× RELATED விஜயவாடாவில் வெள்ளம் சூழ்ந்த...