×

சீதாராம் யெச்சூரி உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி

புதுடெல்லி: சீதாராம் யெச்சூரி உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி(72) நிமோனியா பாதிப்பால் நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை கட்சியின் தலைமையகத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு ஏராளமான அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பிறகு சீதாராம் யெச்சூரியின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

The post சீதாராம் யெச்சூரி உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Sitaram Yechury ,New Delhi ,Communist Party of India ,General Secretary ,Dinakaran ,
× RELATED சீதாராம் யெச்சூரி மறைவு சென்னையில் கட்சித்தலைவர்கள் அஞ்சலி