×

ஓணம், புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்கள் குவிந்தனர்

திருவனந்தபுரம்: ஓணம், புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இதையொட்டி சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இவ்வருடம் ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.இதை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.

தந்திரி பிரம்மதத்தன் நம்பூதிரி முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்தார். நேற்று வேறு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று முதல் ஓணம் சிறப்பு பூஜைகள் தொடங்குகின்றன. இன்று முதல் மூன்று நாட்களுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் ஓண விருந்து வழங்கப்படும். 21ம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். நேற்று மாலை நடை திறக்கும்போது சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் பக்தர்கள் வருகை அதிகரிக்கும்.

The post ஓணம், புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Onam ,Puratasi ,Thiruvananthapuram ,Sabarimala Ayyappan ,Sabarimala Ayyappan temple ,Onam festival ,
× RELATED ஓணம், புரட்டாசி மாத பூஜை; சபரிமலை...