×

வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை ரத்து செய்தது ஒன்றிய அரசு

டெல்லி: வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை ஒன்றிய அரசு ரத்து செய்தது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய குறைந்தபட்ச விலை ரூ.46,000ஆக இருந்தது. விளைபொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலை ரத்து செய்தது.

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களான வெங்காயத்துக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக டன்னுக்கு 550 அமெரிக்க டாலராக ஒன்றிய அரசு முன்பு நிர்ணயித்திருந்த நிலையில், இந்த குறைந்தபட்ச விலையை மத்திய அரசு இன்று ரத்து செய்தது உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் தனது அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெங்காயம் உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரத்தில் விரைவில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த உத்தரவு மறு உத்தரவு வரும் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை ரத்து செய்தது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : EU government ,Delhi ,India ,Union Government ,Dinakaran ,
× RELATED நாட்டிலேயே அதிகம் பேருக்கு...