கமலா ஹாரிஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவுக்கு பேரழிவு: எலான் மஸ்க் பதிவு

வாஷிங்டன்: கமலா ஹாரிஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவுக்கு பேரழிவு ஏற்படும் என்று எக்ஸ் வலைதள உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இரு வேட்பாளர்களும் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களுக்கு பல்வேறு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் டொனால்டு டிரம்புக்கு எக்ஸ் வலைதள உரிமையாளர் எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்து அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்

இந்நிலையில், கமலா ஹாரிஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவுக்கு பேரழிவு ஏற்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எலான் மஸ்க் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்; அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஜனநாயகத்தையும் அமெரிக்காவையும் காப்பாற்றுவார். கமலா ஹாரிஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவுக்கு பேரழிவு ஏற்படும் எனது வார்த்தைகளை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

The post கமலா ஹாரிஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவுக்கு பேரழிவு: எலான் மஸ்க் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: