முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: கலெக்டர் தகவல்

 

செங்கல்பட்டு, ஆக.26: முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற, விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: 2024-2025ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட உள்ளது.

இதில், 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி, மாணவர்களுக்கும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி மாணவர்களுக்கும், 15 வயது முதல் 35 வரை பொதுப் பிரிவினரும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள், போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்ய கால அவகாசம் வரும் 2.9.204ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

எனவே, விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் தவறாமல் https://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. (குறிப்பு. இணையதளம் வாயிலாக மட்டுமே முன்பதிவு செய்திட வேண்டும், நேரில் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது). விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கைபேசி எண் 74017 03461 அல்லது தொலைபேசி எண் 044-2742 6889 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை 95140 00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: