வீட்டுவேலை செய்வதுபோல் நடித்து கைவரிசை மயக்க மருந்து கொடுத்து நகைகளை திருடிச்சென்ற பெண் கைது

*273.8 கிராம் தங்கம் பறிமுதல்

திருமலை : வீட்டு வேலை செய்வதுபோல் நடித்து மயக்க மருந்துகொடுத்து நகைகளை திருடிச்சென்ற பெண்ணை போலீசார் கைது செய்து, 273.8 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலம் கோனசீமா மாவட்டம் அங்கார நகரத்தை சேர்ந்த சூர்யச்சந்திர சக்ரா ஜகதம்பா என்கிற புஜ்ஜி. இவருக்கு திருமணமாகி நான்கு வருடங்களுக்கு முன் கணவர் இறந்துவிட்டார். இதனால் வீடுகளில் வீட்டுவேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தார். இந்நிலையில் புஜ்ஜி வீட்டின் உரிமையாளர்களுக்கு சாதம், டீ, காபி, பிரசாதம் போன்றவற்றில் ஹைடோஸ் மயக்க மாத்திரைகளை கலந்து வழங்கிவிடுவார்.

அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது அவர்கள் உடலில் உள்ள தங்கமும், பணமும், பீரோவில் இருக்கும் நகைகைகளை திருடி, அதனை வங்கிகள் அல்லது தனியார் நிதி நிறுவனங்களில் அடமானம் வைத்து பணத்தை பெற்று வந்துள்ளார். மயக்கம் தெளிந்தவுடன், இதுதொடர்பாக் காவல் நிலையங்களில் வீட்டின் உரிமையாளர்கள் புகார் அளித்தனர். மேலும் காக்கிநாடா மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டங்களிலும், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தனுகு மற்றும் தாடேபள்ளிகுடம் காவல் நிலையங்களிலும் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் குறித்து அடுத்தடுத்து புகார்கள் வந்தது.

அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு ராஜமுந்திரி பொம்மூரில் தங்கியிருந்த புஜ்ஜிதான் இதுபோன்ற திருட்டு சம்பவங்களை நடத்தி வருகிறார்என தெரியவந்து, அவரை கைது செய்தனர். சிறைக்கு சென்ற பூஜ்ஜி 2021 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். வெளியே வந்தவர் மீண்டும் தன் மாற்றிக் கொள்ளாமல் மீண்டும் அதே மாதிரியான திருட்டுகளை செய்து வந்துள்ளார்.

மேலும் எச்சரிக்கையாக இருந்த போலீசார், இந்த பெண்ணிடம் கவனமாக இருக்குமாறு அவரது புகைப்படத்துடன் மக்களை எச்சரித்தனர். பல்வேறு இடங்களில் வீட்டு வேலை செய்து மயக்க மருந்து கொண்டு பூஜ்ஜிதான் இதுபோன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதனையடுத்து நேற்று புஜ்ஜியை கைது 6 வழக்குகள் தொடர்பான 273.8 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

The post வீட்டுவேலை செய்வதுபோல் நடித்து கைவரிசை மயக்க மருந்து கொடுத்து நகைகளை திருடிச்சென்ற பெண் கைது appeared first on Dinakaran.

Related Stories: