தமிழ்நாட்டில் பலரும் உடல் உறுப்பு தானம் செய்து வருகின்றனர். இதனை மேலும் ஊக்குவிக்கும் விதமாக உடல் உறுப்பு தானம் செய்வோரின் உடலுக்கு அரசு மரியாதையை செலுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதைத்தொடர்ந்து மக்கள் மத்தியில் இதற்கான ஆர்வம் அதிகரித்தே வருகிறது. அதன்படி உடல் உறுப்பு தானம் செய்பவரின் உடலுக்கு, அரசு சார்பில் அமைச்சர்களோ, எம்.எல்.ஏ-க்களோ சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
2023-ம் ஆண்டு 178 நபர்களும், 2022-ம் ஆண்டு 156 நபர்களும், 2021-ம் ஆண்டு 60 நபர்களும், 2020-ம் ஆண்டு 55 நபர்களும், 2019-ம் ஆண்டு 127 நபர்களும் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர்.
The post கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவாக தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் வழங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு appeared first on Dinakaran.