டிசம்பர் 1ம் தேதி முதல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராகிறார் ஜெய் ஷா: பதவிக்காலம் 3 ஆண்டுகள்.!

டெல்லி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தற்போதைய தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்க்லே உள்ளார். இவரது பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. ஏற்கனவே 2 முறை பதவி வகித்த அவர் 3-வது முறையாக போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். இதனையடுத்து ஐ.சி.சி தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 27ம் தேதிக்குள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும்,புதிதாக தேர்ந்தெடுக்கபடுபவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் இருக்கும் எனவும் அறிவித்திருந்தது.

ஐ.சி.சி.-ன் தலைவராக பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷாவுக்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. அதன்படியே தற்போது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா , சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகிறார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராகும் மூன்றாவது இந்தியர் என்கிற பெருமையை ஜெய் ஷா பெற்றுள்ளார். ஏற்கனவே ஜக்மோகன் டால்மியா, சரத்பவார் ஆகியோர் ஐசிசி தலைவராக பதவி வகித்தனர். இவரது பதவிக்காலம் டிசம்பர் 1ம் தேதி ஆரம்பமாகி 3 ஆண்டுகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post டிசம்பர் 1ம் தேதி முதல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராகிறார் ஜெய் ஷா: பதவிக்காலம் 3 ஆண்டுகள்.! appeared first on Dinakaran.

Related Stories: