ஆர்சிபியின் பிரதான எதிரி கேகேஆர் தான்: விராட் கோஹ்லி பேட்டி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி, சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி நேற்றுடன் 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி தனியார் விளையாட்டு சேனல் அவரின் சிறப்பு பேட்டியை வெளியிட்டுள்ளது. கோஹ்லியிடம் கேட்கப்பட்ட 16 கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார். இதில் ஐபிஎல்லில் ஆர்சிபியின் பிரதான எதிரி மும்பை இந்தியன்சா, கேகேஆர் அணியா என்ற கேள்விற்கு, கேகேஆர், என்றார். பிடித்தமான கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனியா, ஏ.பி.டி.வில்லியர்ஸ்சா என்ற கேள்விக்கு இருவரும் பிடிக்கும், என்றார்.

இதனிடையே சர்வதேச கிரிக்கெட்டில் 16 ஆண்டை நிறைவு செய்த கோஹ்லியை பாராட்டி , ரோகித்சர்மா அளித்துள்ள பேட்டியில், கோஹ்லி உத்வேகம் உள்ள வீரர். அவருக்கு வெற்றி எப்போதும் வேண்டும். அவருடைய வெற்றி வேட்கை யாராலும் ஈடு கொடுக்க முடியாதது. நீங்கள் எப்போது கோஹ்லியை பார்த்தாலும் அவர் களத்தில் ஒரு விதமான சக்தியை கொண்டு வருவார். இந்தியாவுக்காக அவர் பல ஆண்டுகள் விளையாடி இருக்கிறார். அவருடைய அனுபவம் இந்திய அணிக்கு மிகவும் முக்கியம். வெற்றி என்பதை கடையில் சென்று உங்களால் வாங்க முடியாது. அது போராட்டத்தின் மூலம் கிடைக்கக்கூடியது. இதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். இதை அனைத்துமே அவர் செய்திருக்கிறார், என்றார்.

The post ஆர்சிபியின் பிரதான எதிரி கேகேஆர் தான்: விராட் கோஹ்லி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: