45வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்; முதல் ரவுண்டில் இந்தியாவின் ஆடவர், மகளிர் அணி வெற்றி: பிரக்யானந்தா, வைஷாலி அசத்தல்

புதாபெஸ்ட்: செஸ் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 45வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடர் ஹங்கேரியில் உள்ள புதாபெஸ்ட்டில் நேற்று முன் தினம் தொடங்கியது. இதில் நேற்று நடந்த முதல் ரவுண்டில் இந்திய வீரர்கள் மொரோக்கோ வீரர்களுக்கு எதிராக மோதினர். இதில் இந்தியாவின் பிரக்யானந்தா தன்னை எதிர்த்து போட்டியிட்ட மொரோக்கோவின் டிசிர் முகமதை வீழ்த்தி வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து வக்கிர் மெஹதி பியரை விதித் குஜராத்தியும், மொயத் அனஸை பென்டலா ஹரிகிருஷ்ணாவும் வீழ்த்தி இந்தியாவுக்கு புள்ளிகளை பெற்று தந்தனர். எல்பிலியா ஜேக்கஸுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்தியாவின் முதல் நிலை வீரர் அர்ஜூன் எரிகைசி இந்தியாவுக்கு மேலும் ஒரு புள்ளியை பெற்று தந்தார்.

இதன் மூலம் முதல் ரவுண்டில் 4 புள்ளிகளை பெற்ற இந்தியா தரவரிசை பட்டியலில் 2வது இடத்தை பிடித்தது. முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான குகேஷ் செஸ் ஒலிம்பியாட் முதல் ரவுண்டில் பங்கேற்கவில்லை. இதை தொடர்ந்து ஜமைக்காவுக்கு எதிராக மோதிய இந்திய பெண்கள் அணி 3.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதில் பிரக்யானந்தாவின் சகோதரி வைஷாலி, தானியா சச்தேவ், திவ்யா தேஷ்முக் வெற்றி பெற ரேஹென்னாவுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் வண்டிகா அகர்வால் டிரா செய்தது குறிப்பிடத்தக்கது.

 

The post 45வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்; முதல் ரவுண்டில் இந்தியாவின் ஆடவர், மகளிர் அணி வெற்றி: பிரக்யானந்தா, வைஷாலி அசத்தல் appeared first on Dinakaran.

Related Stories: