வங்கதேசத்திற்கு எதிராக நடைபெறும் சென்னை டெஸ்ட்டில் கோஹ்லிக்கு காத்திருக்கும் 2 சாதனைகள்

சென்னை: இந்தியா- வங்கதேச கிரிக்கெட் அணிகள் இடையே 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் வரும் 19ம்தேதி முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் 9 மாதத்திற்கு பின்னர் விராட் கோஹ்லி டெஸ்ட்டில் களம் இறங்க உள்ளார். கோஹ்லி கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் விளாசினார். அதன்பிறகு டிசம்பர் மாதம் 2023ம் ஆண்டு தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்டில் 76 ரன் எடுத்தார். இந்நிலையில் 35 வயதான விராட் கோஹ்லி, சென்னை டெஸ்ட்டில் புதிய சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அவர் 58 ரன்கள் அடித்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 27 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

தற்போது இந்த சாதனை சச்சின் டெண்டுல்கர் வசம் உள்ளது. கோஹ்லி தற்போது, 16,000. 17,000 என 26 ஆயிரம் வரை அவர்தான் அதிவேகமாக இந்த மைல்களை எட்டிய வீரர் என்ற சாதனையை வைத்திருக்கிறார். டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 782 இன்னிங்சில் விளையாடி 34 ஆயிரத்து 357 ரன்கள் அடித்திருக்கிறார். இலங்கை வீரர் சங்கக்கார 666 இன்னிங்ஸில் 28017 ரன், ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் 668 இன்னிங்சில் 27,483 ரன் அடித்திருக்கிறார். கோஹ்லி 591 இன்னிங்சில் 26942 ரன் எடுத்துள்ளார். மேலும் இன்னும் 152 ரன் அடித்தால் டெஸ்ட்டில் 9000 ரன்களை தொட்ட 4வது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். இதற்கு முன்பு கவாஸ்கர், சச்சின், டிராவிட் ஆகியோர் இந்த மைல் கல்லை எட்டி உள்ளார். கவாஸ்கர் 192 இன்னிங்சில் 9000 ரன் கடந்திருக்கிறார். கோஹ்லி டெஸ்ட்டில் இதுவரை 191 இன்னிங்ஸ் விளையாடுகிறார். சென்னை டெஸ்ட்டில் அவர் 152 ரன்அடித்தால் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்ய முடியும்.

 

The post வங்கதேசத்திற்கு எதிராக நடைபெறும் சென்னை டெஸ்ட்டில் கோஹ்லிக்கு காத்திருக்கும் 2 சாதனைகள் appeared first on Dinakaran.

Related Stories: