சுதந்திரதினத்தில் வெடிகுண்டுகள் பறிமுதல் அசாமில் வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு

திப்ருகர்: சுதந்திரதினத்தன்று அசாம் மாநிலத்துக்கு உல்பா தீவிரவாத அமைப்பினர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் மாநிலத்தின் 10 மாவட்டங்களில் இருந்து வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் மாநில உளவுத்துறையின் தோல்வியை காட்டுவதாக குற்றம்சாட்டி முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து விசாரிக்க சிறப்பு டிஜிபி ஹர்மீத் சிங் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட மாவட்டங்களில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

The post சுதந்திரதினத்தில் வெடிகுண்டுகள் பறிமுதல் அசாமில் வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு appeared first on Dinakaran.

Related Stories: