ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பங்கேற்கிறோம்: அமைச்சர் தங்கம் தென்னரசு


சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்ளை சந்தித்து பேசினார். அப்போது; முதல்வர் மருந்தகம் திட்டம் பொதுமக்களுக்கு மிகுந்த பயன் தரும் திட்டமாக அமையும். விடுதலை நாளில் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். காக்கும் கரங்கள் திட்டம் மூலம் உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி கடனுதவி வழங்கப்படும். முதல்வர் மருந்தகம் திட்டம் பலருக்கு வேலை வாய்ப்பு வழங்கக்கூடியது என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்; ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பங்கேற்கிறோம். ஆளுநர் பதவிக்கு மதிப்பு அளிக்கும் வகையில் விருந்தில் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். சுதந்திர தினத்தையொட்டி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். ஆளுநர் அழைப்பை ஏற்று அரசு சார்பில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் விருந்தில் பங்கேற்கிறோம் என்று கூறினார்.

The post ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பங்கேற்கிறோம்: அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.

Related Stories: