இந்தியாவுக்குள் ஊடுருவிய 11 வங்கதேசத்தினர் கைது: எல்லை பாதுகாப்பு படையினர் அதிரடி

புதுடெல்லி: இந்தியாவுக்குள் ஊடுருவிய 11 வங்கதேசத்தினரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். எல்லை பாதுகாப்பு படையின்(பிஎஸ்எப்) கூடுதல் டிஜிபி ரவி காந்தி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,வங்கதேசத்தில் அமைதியின்மை நிலவுகிறது.வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள கலவரம் மற்றும் 15ம் தேதி நடக்கும் சுதந்திர தினத்தையொட்டி இந்தியா-வங்கதேசம் இடையேயான 4,096 கிமீ எல்லை பகுதியில் பாதுகாப்பு நிலைமை பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய 11 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்கம்,திரிபுரா எல்லையில் தலா 2 பேரும்,மேகாலயா எல்லையில்7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.சட்ட நடவடிக்கைக்காக அவர்களை மாநில போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளோம் என கூறப்பட்டுள்ளது.

பிஎஸ்எப் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,‘‘பிஎஸ்எப் அதிகாரிகள் வங்கதேச எல்லை பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசினர். குறிப்பாக அங்கு உள்ள சிறுபான்மையினர் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வங்கதேச அதிகாரிகளிடம் பிஎஸ்எப் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்’’ என்றார்.

The post இந்தியாவுக்குள் ஊடுருவிய 11 வங்கதேசத்தினர் கைது: எல்லை பாதுகாப்பு படையினர் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: