பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் ஆய்வு

கூடுவாஞ்சேரி: காட்டாங்குளத்தூர் ஒன்றியம் ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை இயக்குனர் பொன்னையா நேற்று திடீரென ஆய்வு செய்தார். இதில் ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈஸ்வரன் கோவில் பகுதியில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சாலையை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் சாலைகள் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8 லட்சத்து 19ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை பணியை ஆய்வு செய்தார். அப்போது, அவருடன் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், கூடுதல் கலெக்டர் அனாமிகாரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர் பவானிகார்த்தி உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில் அரசின் திட்டப்பணிகள் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை இயக்குநர் ஆணையர் பொன்னையா நேற்று ஆய்வு மேற்கொண்டார். நபார்டு வங்கி நிதி உதவித் திட்டத்தின் கீழ், ஆமூர் கிராமத்தில் நடைபெற்று வரும் பாலப்பணிகளை ஆய்வு செய்து, தையூர் ஊராட்சியில் நடைபெறும் மழைநீர் வடிகால்வாய் பணிகளையும் பார்வையிட்டார். அப்போது், பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் உத்தரவிட்டார். ஆய்வின்போது செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் ஆட்சியர் அனாமிகா ரமேஷ், திருப்போரூர் ஒன்றிய ஆணையாளர் பூமகள்தேவி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகலைச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: