அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மூதாட்டி, பீர்பாட்டிலை எடுத்து பஸ்சின் கண்ணாடி மீது வீசினார். இதில் பஸ்சின் பின்புற கண்ணாடி உடைந்து உள்ளே இருந்த பயணிகள் மீது கண்ணாடி நொறுங்கி விழுந்தது. அதை கவனித்த டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். பின்னர் பஸ்சில் இருந்து இறங்கி ஓடி வந்த பெண் கண்டக்டர், மூதாட்டியை பிடித்து, `ஏன் இப்படி செய்தீர்கள்?’ எனக்கேட்டார்.
அப்போது மூதாட்டி தனது பையில் இருந்து பாம்பை வெளியே எடுத்து கண்டக்டர் மீது வீசினார். இதனால் அதிர்ச்சியடைந்த கண்டக்டர் மற்றும் சக பயணிகள் அலறியடித்து ஓடினர். அங்கு வந்த போலீசார், மூதாட்டியை பிடித்து அவரது பையை சோதனையிட்டனர். பையில் மேலும் 2 பாம்புகள் இருந்தது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post ஐதராபாத்தில் பீர்பாட்டிலால் பஸ் கண்ணாடி உடைத்து பெண் கண்டக்டர் மீது பாம்பு வீசிய போதை மூதாட்டி: ஏறுவதற்குள் பஸ்சை இயக்கியதால் ஆத்திரம் appeared first on Dinakaran.