அந்த வகையில், இந்த ஆண்டுக்கான வாக்காளர் திருத்தப்பணிகளை மேற்கொள்வது தொடர்பான அறிவுறுத்தல்களை இந்திய தேர்தல் ஆணையமானது வழங்கியுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர்பட்டியல் தயார் செய்யப்பட உள்ளது. அதன்படி வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும்பணியான தற்போது உள்ள வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது வீடு வீடாக சென்று ஆய்வு செய்வது, வாக்காளர்களின் எண்ணிக்கை ஏற்ப வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அமைப்பது தொடர்பான பணிகளை 20 ஆகஸ்ட் முதல் 28 அக்டோபர் வரை மேற்கொண்டு வரைவு வாக்காளர்பட்டியலை 29ம் தேதி வெளியிட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையமானது அறிவுறுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து வாக்காளர்பட்டியல் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். அந்த முகாம்களானது அந்த மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரிகள் வசதிக்கேற்ப நாட்களை பின்னிட்டு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நடைபெறும். பரீசீலனை முடிந்து இறுதி வாக்காளர்பட்டியலை ஜனவரி 6ம் தேதி வெளியிடவேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
The post 2025 ஜன.1-ஐ தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்..!! appeared first on Dinakaran.