விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மக்கள் சந்திப்பு பயணம் துவக்கம்

சாயல்குடி, ஆக.9: காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு இணைப்புக் கால்வாய் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், பெருநாழி முதல் ராமநாதபுரம் வரையிலான மக்கள் சந்திப்பு பரப்புரை பயணம் நேற்று முன்தினம் தொடங்கியது. கூட்டமைப்பின் மாவட்டச் செயலர் மலைச்சாமி தலைமை வகித்தார்.

ராமநாதபுரம் பெரிய கண்மாய் நிரம்பிய பிறகு கடலுக்கு செல்லும் வைகை உபரி நீரை பரளைக் கால்வாய் வழியாக முதுகுளத்தூர்,கமுதி, கடலாடி வட்ட கண்மாய்களுக்கு கொண்டு வந்து, பாசனத்துக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பரப்புரை பெருநாழி, கமுதி, அபிராமம், பார்த்திபனூர், பரமக்குடி வழியாக ராமநாதபுரம் ராமலிங்க விலாசம் அரண்மனை பகுதியில் வருகின்ற 9ம் தேதி முடிவடைய உள்ளதாக கூட்டமைப்பின் மாவட்டச் செயலர் மலைச்சாமி தெரிவித்தார்.

The post விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மக்கள் சந்திப்பு பயணம் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: